சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு (எலெக்ட்ரோனிக்) சிகரெட்டுக்கள் 130 உடன் 26 வயதுடைய ஒருவர் வெல்லம்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் SLNS ரங்கல கப்பலை சேர்ந்த கடற்படை வீரர்கள் மற்றும் மிரிஹான குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே வெல்லம்பிட்டியை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.இந்த நடவடிக்கையின் போது கார் ஒன்றும் காவலில் எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.








