அஸ்வெசும நலன்புரி பயன் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஒகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு இன்று (3) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட 6,18,352 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மொத்தம் ரூ. 3.091 பில்லியன் சிரேஷ்ட கொடுப்பனவாக வழங்கப்பட உள்ளது என நலன்புரி பயன்கள் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை,இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 சிரேஷ்ட பிரஜைகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு ரூ. 391.3 மில்லியன் இன்று வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியான பயனாளிகள் இன்று முதல் தங்கள் அஸ்வெசும வங்கி கணக்குகளில் இருந்து கொடுப்பனவு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








