ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பை போலவே தோல்வியுற்ற தரப்புக்கும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து கட்டியெழுப்பும் பொறுப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களுடன் மஹரகம பகுதியில் நேற்று(01.10.2024) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல.

இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

அதிலிருந்து பின்வாங்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களோடு மாத்திரம் மட்டுப்பட்டுவிடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here