முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கடந்த சில நாட்களாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பொது தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக வெளிநாடு சென்றுள்ளதுடன் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் விஜயம் செய்துள்ள அவர் திட்டமிட்டபடி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும், தான் அமைச்சராக இருந்த போது அந்த செயற்பாடுகள் அனைத்தையும் தாம் முழுமையாக சட்டரீதியாக செய்ததாக அவர் கூறுவதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.








