லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணியை 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வசேத கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து185 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டி சம்பியனானது.
இதற்கமைய ரைலி ரூசோவ் 52 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 105 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.








