முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நீரில் மூழ்கிக் காணாமல் போன ஆசிரியை ஒருவரும் 17 வயது மாணவர் ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவராவார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகல் நாயாறு கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here