சூரியன் தெற்கு நோக்கி நகர்வதன் காரணமாக, (28) முதல் செப்டம்பர் 7 வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு மேல் சூரியன் நேராக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (28) பகல் 12.11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு சூரியன் நேராக உச்சம் கொடுக்கும்.
இதேநேரம் மேல், சபரகமுவ, தென், வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75mm க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் எனவும் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40-50km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.






