நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
299 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .இதேநேரம்
21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் திபெத்தில் உள்ள 200 இந்தியர்கள் உதவி கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன 299 இந்தியர்களில் 73 பேர் மத்திய நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை மொத்தம் 644 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை எனவும் இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர் என்று தெரிவித்துள்ளது. இதுதவிர 127 நேபாளிகளையும் காணவில்லை எனவும் நேபாள சுற்றுலாத்துறை குறிப்பிட்டுள்ளது.






