மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நுகேகொடை தலபதபிட்டியவில் வசித்த 5 வயது சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்த சிறுவனின் உடல் மேலதிக பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








