இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (25)  மாலை  நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கிளையில் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வெற்றிக் கொண்டாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தொடர்ந்து உள்ள சில முக்கிய  பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here