ஹிங்குராகொடை பகுதியில்  இரண்டு  வீடுகளுக்கு வெளியே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 14 நெல் மூட்டைகளைத் திருடிய  மூவர் நெல்லுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் கிரித்தல பூரணகம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் மற்றொருவர் ஹிங்குராகொடைபிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஹிங்குராகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 20, 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் நெல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேங்காய் மட்டைகளை  சேகரிக்கும் போர்வையில் வீடுகளுக்குச் சென்ற இவர்கள் சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த பதுக்கி பதினான்கு நெல்  மூட்டைகளைத்  திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட நெல் மூட்டைகளின் பெறுமதி 103,000 ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here