விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நெல் விவசாயிகளுக்கான உர மானிய விலையை நிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர், நெல் பயிர்செய்கை தொடர்பில் திட்டவட்டமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி, நெல் உற்பத்தியை அதிகரித்து, அரிசி இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் கொள்முதல் விலை முறைப்படுத்தப்படவுள்ளதாகவும், விவசாயிக்கு அநீதி ஏற்படாத நிலையான விலை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.








