உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷ்யா கடைப்பிடிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை ரஷ்யா தொடா்ந்து விதிப்பது அமைதி முயற்சிக்கு எதிராக அமைந்து, இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தார்.







