ஆசிய கிண்ண T20 தொடரின் (Men’s T20 Asia Cup 2025) குரூப் B-இல் நேற்று ( 16) அபுதாபியில் உள்ள ஷேக் ஸயீத் மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில், பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி, பங்களாதேஷ் அணியின் சூப்பர் 4-இல் முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. ஏனெனில் இலங்கைக்கு எதிரான முந்தைய தோல்வியால் அவர்களின் நிகர ஓட்ட வீதம் (NRR) பாதிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 154/5 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் தன்சிட் ஹசன் தமிம் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான் (2/26) மற்றும் நூர் அகமது (2/23) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146/10 ஓட்டங்களைப் பெற்று 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவ்வணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்து வீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here