அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் இன்று மன்னர் சார்ள்ஸை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரித்தானியாவிற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது விஜயமாகும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் அவர் அங்கு விஜயம் செய்திருந்தார்.
ட்ரம்ப் இரண்டு நாட்கள் பிரித்தானியாவில் தங்குவார் என்றும், அந்த காலத்தில் 50 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







