பசறை – மடுல்சீமை வீதியில் 7ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (23.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here