பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சுவாசப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.








