காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாட்டில் தற்போது சவால் மிகுந்த காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஸ, இந்த காலப்பகுதியில் பொறுமையாக செயற்பட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையை அரசாங்கம் கையாள்வதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கலந்துக் கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.








