பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

பண்டாரவளை நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார்.

அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த உந்துருளியின் சாரதி சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளையைச் சேர்ந்த 36 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here