கமநல காப்புறுதிச்சபையினால் கடந்த போகங்களில் பயிர் அழிவுகளுக்கு காப்புறுதி பெற்றவர்கள், பெற்ற காப்புறுதியில் திருப்தியின்மை காணப்படுப்படுமாயின் அது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்ட கமநல காப்புறுதிச்சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் (03.12.2024) புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்தில் குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது விவசாயிகள் தமது முறைப்பாடுகளினை முன்வைத்தனர். குறித்த நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்ட கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர் பி.பூரணச்சந்திரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








