இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிக்க சட்டமா அதிபர் தொடர் வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த வழிகாட்டுதல்கள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தீர்ப்பளித்த தலைமை நீதிபதி, வழிகாட்டுதல்களை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் இறுதி வரைவில் இணைக்கப்பட வேண்டும் என்றும், இறுதி வரைவைத் தயாரித்து நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.








