அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை தமது பதவிக்காலத்தில் ஆக்கிரமித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அந்த இடத்தை காலி செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு முன்னாள் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் நேற்று அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு கிட்டத்தட்ட 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மடிவெல வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும் வரையில் எம்.பி.க்கள் தங்கியிருப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.








