பாடசாலை நேரம் நீடிக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாடசாலை நேர நீட்டிப்பின் காரணத்தையும் விளக்கினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்திசைக்கவும், பயிற்சிப் நேரத்தை மேம்படுத்தவும் பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
இந்த மாற்றத்தால், மாணவர்கள் கற்றல் செயல்முறையில் கூடுதல் நேரம் பெறுவார்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்ய தேவையான நேரத்தைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.







