பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
அதன்படி, இந்த விவாதத்தின் இறுதி நாளான இன்றும் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் நாளை மறுநாள் (27) ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here