பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து இன்று (31) பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த பல அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இறுதியாக, பாதுகாப்பு தேவைப்படும் உறுப்பினர்களுக்கு பொலிஸார் வழியாக தேவையான பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபரும் சபாநாயகரும் இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.








