2025ம்  ஆண்டுக்கான வரி வருவாயில் இலங்கை சுங்கத் துறை ரூ.2 டிரில்லியன் என்ற எல்லையைத் தாண்டியது.

சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் சீவாலி அருக்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டாவது,

இந்த சாதனை இலங்கை சுங்கத்திற்கு ஒரு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

அரசாங்க வரித் துறையால் இதுவரை சேகரிக்கப்பட்ட அதிகபட்ச வருடாந்திர வருவாயைப் இது பதிவு செய்துள்ளது.

மேலும் மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் ரூ.630 பில்லியன் ஈட்டப்பட்டது.

தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை சுங்கத்துறை ஆண்டு வருவாய் இலக்கை அண்ணளவாக ரூ. 300 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் சீவாலி அருக்கோடா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here