பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றையதினம் (05.02.2025) யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கூலர் வாகனத்தில் இருந்து 60 கிலோ மற்றும் கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தடையப் பொருட்கள் அனைத்தும் இன்றையதினம் (06.02.2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் அசிரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








