கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (09.12.2024) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம், கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here