எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய தொழிநுட்பத்திற்கான அணுகலை உருவாக்குவோமென தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் சமூக வானொலி, தொலைக்காட்சி சேவைகள், புதிய தொழில்நுட்பம் மூலம் புதிய தகவல் தொடர்பு வலையமைப்புகள் என்பன ஆரம்பித்து வைக்கப்படும். இது கிராம இராஜ்ஜிய வேலைத்திட்டத்தின் பிரதான செயல்பாடு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here