பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் நேற்று (22.05.2025) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் இந்திய முதலீட்டாளர்களுக்கு இது பற்றி தெளிவுபடுத்துமாறும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]






