தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு தனது 50 ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில், பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி பாபு தனது தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி மூலம், பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.








