புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில், அங்கு பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஒரு விசேட கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விசேட விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் திரு ரணசிங்க மற்றும் அவர் தலைமையிலான அதிகாரிகள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், பொறியியலாளர்கள், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்துடன், அமைச்சர் விமல் ரத்நாயக்காவின் விசேட இணைப்பாளர் திரு சிறீவாகிசனும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

துறைமுகத்தின் நிலவரத்தை நேரில் பார்வையிட்டு, தொழில்நுட்ப தேவைகள் மற்றும் அபிவிருத்திச் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம், எதிர்காலத்தில் குறிகட்டுவான் துறைமுகம் மீன்பிடித் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் திட்டமிடப்பட உள்ளது.


[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








