கடகம் ;

கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும்.

எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும் காலம் வரும். மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும். பிரச்சனை என்று நினைக்கும் பல விஷயங்களை மிக எளிமையாக நீங்கள் கடந்து விடலாம்.

துலாம் ;

புதனின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும், இதனால் அதிக லாபம் கிடைக்கும்.

குழந்தைகள் மூலம் நீங்கள் சில நல்ல செய்திகள் தேடிவரும், அவர்களின் வெற்றி உங்களுக்கு மரியாதையை பெற்றுத்தரும். வீட்டில் சில சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறப்பான செயல்பாடுகள் இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இது நல்ல நேரம்.

தனுசு ;

தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் எதிரிகளை வென்று வெற்றிக்கொடி நாட்டுவார்கள். பலர் உங்களுக்கு தேடிவந்து உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடையலாம். உங்களின் நீண்ட கால பிரச்சினைகள் இப்போதும் மிகவும் எளிதாக தீர்க்கப்படும்.

இது உங்கள் பெயரும் புகழும் சமூகத்தில் அதிகரிக்க உதவும். உங்கள் திறமைகளை உங்கள் குடும்பத்தினர் அங்கீகரிப்பார்கள். உங்கள் மனைவியிடமிருந்து பல விஷயங்களுக்கு முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு திருமணம் கைக்கூடும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கும்பம் ;

கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நற்பலன்களைப் பெறலாம். வாழ்க்கையில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழல் அவர்களுக்கு அமையும். அலுவலகத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு அலுவலகத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் இலாபம் கொடுக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here