அரசாங்க பகுப்பாய்வாளராக திருமதி பத்திரகே சந்தியா குமுதுனி ராஜபக்ஷவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், அரசாங்க பகுப்பாய்வாளராக கடமையாற்றிய திருமதி தீபிகா செனவிரத்ன 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஓய்வுபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர உத்தியோகத்தர்களின் மூப்புப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பெற்று தற்போது மேலதிக அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றும் திருமதி சந்தியா குமுதுனி ராஜபக்ஷவின் நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here