புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் (28/01/2025) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்-பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








