இந்தியாவின் அம்பர்னாத் பகுதியில் வசித்து வரும் அக்ஷய் என்பவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை இடம்பெற்று வெற்றியளித்துள்ளது.
30 வயதான அக்ஷய் என்பவருக்கு 26 வயதில் அவருக்கு முதல் முதலில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும் அதை தவிர அக்ஷய்க்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் வைத்தியர் நிபுணர் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அக்ஷய்க்கு இதயத்தை தானமாக வழங்குவதற்கு ஒருவர் முன்வந்ததுடன் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சையை அடுத்து, முன்னெச்சரிக்கையாக ஓராண்டு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அக்ஷய் இப்போது வேலைக்கு வெளியே செல்வதற்குத் தயாராக உள்ளதாகவும் குறித்த இளைஞர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளமை ச்மூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகின்றது.