ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையில், வலுசக்தி அமைச்சு மற்றும்வலுசக்தி நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (16) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளைக் கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்த இந்த புதிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன் ஹம்பாந்தோட்டையின் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பலப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங் மற்றும் சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த ஜயசிங்க ஆகியோர் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.








