புதிய கல்வி மறுசீரமைப்பை தொடர்பாக யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க இன்னும் கால அவகாசம் வழங்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருணாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தற்காலிகத் திட்டமல்ல, மாறாக ஒரு நீண்டகாலக் கொள்கையாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

அவரது விளக்கத்தில், புதிய தொழில்நுட்ப உலகத்துடன் இணைந்து சுய ஆய்வின் மூலம் அறிவைப் பெறும் பொறுப்புள்ள குடிமகனை உருவாக்குவதே இந்த கல்வி மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

புதிய முறையின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக நடைமுறை உண்மை புரிதல், பாடத் தெரிவு, சிறுவர்களின் தனிப்பட்ட கல்வி முன்னேற்ற மதிப்பீடு மற்றும் தொழில்சார் பாடங்கள் என்பனக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

2026ஆம் ஆண்டில் முதல், புதிய கல்வி முறைமை 1ஆம் தரம் மற்றும் 6ஆம் தரத்திற்கு ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறுவர்கள் தொழில்நுட்பத்தில் நுட்பம் பெற்றவர்கள் எனவும், ஆசிரியர்கள் அதனை ஏற்று, சுய கற்றலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

“தெரிவு அடிப்படையிலான கல்வியைத் தாண்டி, வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவியல் கற்றலை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் பின்னணியில் பரீட்சை மையமற்ற, அறிவை மையமாகக் கொண்ட கல்வி அமைப்பை உருவாக்குவதே இலக்கு” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த மறுசீரமைப்பு இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் இருப்பதால், விவாதங்கள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் யோசனைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஹரிணி அமரசூரிய கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here