ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் நேற்று (ஜூலை 29) அதிகாலை 8.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து பசுபிக் பெருங்கடல் எல்லை பகுதியில் உள்ள நாடுகள் பலருக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஜப்பான், ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, மற்றும் பல பசுபிக் தீவுகள் இவை அனைத்தும் தற்போது பேரலை அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் கடலோரப் பகுதிகள் மற்றும் ஹவாய் தீவுகள் முழுவதும் 1–3 மீட்டர் உயரமுள்ள பேரலைக்கான வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வானிலை ஏஜென்சி மற்றும் பசுபிக் பேரலை எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளன.
மக்கள் பாதுகாப்பு கருதி, கரையோரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக மேல்நிலைக்கு செல்லவும், கடற்கரைகளை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களான கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் அலாஸ்கா மாநிலத்துக்கும் ஆழிப்பேரலைக்கான முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அலாஸ்காவில் உள்ள அலூடியன் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் பேரலை நேரிடும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








