புதிதாக நியமிக்கப்பட்ட 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.
இந்த புதிய இராஜதந்திரிகள் பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், டொமினிகன் குடியரசு, கானா, புருனே தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இன்று ஜனாதிபதியிடம் நம்பிக்கைப் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் விபரம் வருமாறு:
வெளிநாட்டு தூதுவர்கள்:
– Jorge Geraldo Kadri – பிரேசில் கூட்டாட்சி குடியரசின் தூதுவர்
– Wei Huaxiang – சீன மக்கள் குடியரசின் தூதுவர்
– கலாநிதி Robert Zischg – ஆஸ்திரியா குடியரசின் தூதுவர்
– Eric S. Meyer – அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர்
– Francisco Manuel Comprés Hernández – டொமினிகன் குடியரசின் தூதுவர்
– கலாநிதி Mohammed Abdalla Ali Eltom – சூடான் குடியரசின் தூதுவர்
– Nubiela Yanarith Ayala– பனாமா குடியரசின் தூதுவர்
உயர்ஸ்தானிகர்கள்:
-D.M. Salahuddin Mahmud– பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர்
– பேராசிரியர் Kwasi Obiri-Danso – கானா குடியரசின் உயர்ஸ்தானிகர்
– Siti Arnyfariza Md Jaini– புருனே தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர்
– Dharamkumar Seeraj– கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்
இந்த நிகழ்வில் வெளிவிவகார, அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.







