அமெரிக்கா நேற்று (24) சிரியாவை தனது “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்” பட்டியலில் இருந்து நீக்கியதோடு தசாப்தங்களாக இருந்த கடுமையான பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.

அல்-நுஸ்ரா முன்னணி என்று முன்பு அழைக்கப்பட்ட HTS அமைப்பின் பயங்கரவாத அமைப்பு பட்டமும் ரத்து செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டு டிசம்பரில் HTS அமைப்பின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அதிபர் பஷார் அல்-அசாத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினர்.

இந்த நிலையில் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசண்ட் “இது சிரியாவில் முதலீடு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ “சிரியர்களுக்கு செழிப்புக்கான பாதை இது” என கூறியுள்ளார்.

இதேநேரம் சிரிய வெளியுறவு அமைச்சர் இதை “வரலாற்று மைல்கல்” என்றும், நிதி அமைச்சர் “சிரிய இராஜதந்திரத்தின் வெற்றி” என்றும் வரவேற்றனர். உலக பொருளாதாரத்துடன் இணைய இது வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

13 ஆண்டு உள்நாட்டு போருக்கு பின் சிரியாவின் மீள்கட்டுமானத்திற்கு இந்த விடயம் முக்கிய படியாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here