இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கண்டியில் இருந்து தெமோதர வரையிலான வார இறுதி சேவையை பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் ‘எல்லா ஒடிஸி’ ரயில் ஆரம்பிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நானுஓயாவிலிருந்து பதுளை வரையான மற்றுமொரு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் திங்கட்கிழமைகளில் கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் மேலதிக புகையிரத சேவை இடம்பெறவுள்ளது.

மேலும், கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான இரவு அஞ்சல் ரயில் ஜனவரி 31 முதல் தினமும் இயக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here