இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (01) காலை முதல் வளி மாசடைந்துள்ளது.
புது டெல்லியின் பல நகரங்கள் அடர்ந்த புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க விதித்த தடையை மக்கள் மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண் 359 புள்ளியாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








