வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (14) காலை கொஸ்வத்த, பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here