புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்று சீதுவை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.

இதன் காரணமாகக் குறித்த மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அலுவலக தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதிலும் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here