2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகள் இன்று இடம்பெறவுள்ளன.
கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியையும் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான 4 மாதத்திற்கான அரச சேவைகளைக் கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த கணக்கு வாக்கு பணத்தின் ஊடாக ஒதுக்கப்படும்.
இந்த கணக்கு வாக்கு பணத்தின் ஊடாக அதிக நிதி போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொகை 2 இலட்சத்து 20,006 பில்லியன் ரூபாவாகும்.







