ஹோமாகம – புறக்கோட்டை பிரதான வீதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மகிழுந்து பந்தயம் ஒன்றை நடத்தியமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் தமிழ், சிங்கள புதுவருடத்தின் புண்ணிய காலத்தில் இந்த போட்டியை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here