ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 70 வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.

ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3 -வது இடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஒவ் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இருந்தபோதிலும் தன்னுடைய புள்ளிபட்டியலில் முதலிடத்தை நோக்கி நகர்வதற்காக ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிரடிகாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here