மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (26.05.2025) பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர். அத்தகைய பிள்ளைகளுக்கு சதுரங்கத்தைப் பழக்கி போட்டியில் பங்குபற்றச் செய்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல. அத்தகைய நிறுவனங்களின் தலைமையில் இருப்பவர்கள் புத்தாக்கமாக சிந்தித்து செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]






