புஸா சிறைச்சாலையின் அறைகள், உட்புறம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனையின்போது பல ஹெரோயின், கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது எட்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள், ஆறு சார்ஜர்கள், ஐந்து சிம் கார்டுகள், ஒன்பது டேட்டா கேபிள்கள் மற்றும் பல பாகங்கள் கைப்பற்றப்பட்டன. இவை மேலதிக நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை அத்தியட்சகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








